சனி, 27 செப்டம்பர், 2008

நல் இதயங்கள் வாழ்க!

இதயத்தால் வாழ்கிறாய்!
கண்களால் பார்க்கிறாய்!
இன்னும் என்னென்ன
உறுப்புகளால் செய்வதை
செவ்வனே செய்கிறாய்!
இதிலென்ன இருக்கிறது!?
அனைவரும் செய்வதுதானே!
நாங்கள் வாழும்போது செய்வதை
இறந்தபின்னும் செய்யும்
மாமனிதா!!! ஹிதேந்திரா!!!
உனக்கல்ல உன்
பெற்றோருக்கு ஆயிரம்
கோடி வணக்கங்கள்!
பெருகட்டும் ஹிதேந்திரர்கள்!
வளரட்டும் உற்றோர் மனம்!!!

4 கருத்துகள்:

தாரணி பிரியா சொன்னது…

\\பெருகட்டும் ஹிதேந்திரர்கள்\\

ஆமாம் தமிழ். நிறைய பேர் பெருக வேண்டும். நேற்று கூட முரளி என்பவரின் இதயம் இன்னொருவருக்கு பொருத்த பட்டதாக செய்தி படித்தேன்.

\\உனக்கல்ல உன்
பெற்றோருக்கு ஆயிரம்
கோடி வணக்கங்கள்\\

நிச்சயமாய், அவர்கள் வாழும் தெய்வங்கள்தானே.

jash சொன்னது…

Hithendran's parents have done an awesome job....

avanga manasu padura paadu enakkku puriyudhu...

andha mathiri oru situation layum avanga eduthirukkara decision ku aayiramaayiram vanakkangal....

தமிழ்தினா சொன்னது…

\\ஆமாம் தமிழ். நிறைய பேர் பெருக வேண்டும். நேற்று கூட முரளி என்பவரின் இதயம் இன்னொருவருக்கு பொருத்த பட்டதாக செய்தி படித்தேன்\\சகோதரி, இது ஒரு நல்ல முன்மாதிரி என்பதில் ஐயமில்லை. ஹிதேந்திரன் தன் உடல் பாகங்கள் செய்த நற் காரியம் அறிய வாய்ப்பில்லை அல்லவா!?

வாழும் காலத்திலேயே உடல் பாகங்களை தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்!

அவ்வகையில், என் உடல் பாகங்கள் சிலருக்கு நிச்சயம் உதவும் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

தமிழ்தினா சொன்னது…

jash said:\\Hithendran's parents have done an awesome job....

avanga manasu padura paadu enakkku puriyudhu...

andha mathiri oru situation layum avanga eduthirukkara decision ku aayiramaayiram vanakkangal....\\உண்மை.. அவர்களே இந்தக் காரியத்தின் முழுப் பொறுப்புக்கு உரியவர்கள்..

இன்னும் பல பெற்றோர்கள் இவ்வாறு முன்வர வேண்டும்..

கொடை அளிக்கப்பட்ட ஹிதேந்திரனின் பாகங்கள் மண்ணை சென்றடையாமல் இப்பூவுலகிலேயே வலம் வரவேண்டும்..

தானம் பெற்றவர்கள், தாங்களும் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் இச் சாதனையை நிகத்தலாம்!

தானம் தருகையிலேயே கட்டாய தானம் பெற்றுக் கொண்டு் தானம் அளிக்கலாம்.