சனி, 25 அக்டோபர், 2008

அதன் பெயர்...... நட்பு..!!!

தாய்மைக்கும்
காதலுக்குமிடையே
இதயத்தில்
இடம் பிடித்தால்
அதன் பெயர்......
நட்பு......


தொப்புள் கொடிக்குத்
தாய்...
தொட்டில் இட
காதல்...


உதிரம் கலவாது
காமம் படியாது
உயிராய் கலப்பது
உயிரைத் தருவது

நட்பு..!!!

6 கருத்துகள்:

தாரணி பிரியா சொன்னது…

சூப்பரான வரிகள் தமிழ்.ஒவ்வொரு வரியும் நிஜம்.

அதிலும் இந்த வரிகள்

\\உதிரம் கலவாது
காமம் படியாது
உயிராய் கலப்பது
உயிரைத் தருவது

நட்பு..!!!\\அற்புத‌ம் த‌மிழ்.

jash சொன்னது…

thamizh... romba nallaarukku....kutti kavidhai supperbb.....

தமிழ்தினா சொன்னது…

நன்றி ப்ரியா அக்கா மற்றும் ஜாஸ்...

குழந்தை வேல் சொன்னது…

அற்புதமான நட்புக் கவிதை. உன் சொந்த நட்பு பற்றிய கவிதையா, தினா????? பொறாமையாய் இருக்கு. கொடுத்து வைத்த அந்த நண்பன் யாருருரு???????????

உன் நட்பு பற்றியக் கவிதைகள் வாசிக்க வாசிக்க, தோழமையின் அர்த்தம் புரியுது.

நண்பா, நீ, உன் நட்பு, உன் "கவி"த்திறன் வாழ்க.

உன் ரசிகனாய்,

தமிழ்தினா சொன்னது…

\அற்புதமான நட்புக் கவிதை. உன் சொந்த நட்பு பற்றிய கவிதையா, தினா????? பொறாமையாய் இருக்கு. கொடுத்து வைத்த அந்த நண்பன் யாருருரு???????????\\

வம்பு வளர்க்காதப்பா... இது பொதுவான நட்பு கவிதை... முதலில் என் வலைக்குடில் வந்தமைக்கு என் நன்றிகள்...


\\உன் நட்பு பற்றியக் கவிதைகள் வாசிக்க வாசிக்க, தோழமையின் அர்த்தம் புரியுது.\\

முதலில் நேரில் வா.. பிறகு பேசுவோம்... நண்பா....

\\நண்பா, நீ, உன் நட்பு, உன் "கவி"த்திறன் வாழ்க.\\

வெறும் "கவி"த் திறன் யாரையும் வாழ வைப்பதில்லை, "கவி"க்கே அரசரானால் ஒழிய... செய்தி புரிந்திருக்குமென நம்புகிறேன்..


அடிக்கடி உன் கால் தடமல்ல.., கைத்தடம் பதித்து செல் நண்பா...

பெயரில்லா சொன்னது…

மிகவும் அருமையான வாரிகள் தமிழ் தினா...

வாழ்த்துக்கள்.