வெள்ளி, 21 நவம்பர், 2008

மலை முகடு...!

 

 

உரசிச் செல்லும் மேகங்கள்

வந்தவுடன் சென்று விட...

காலை வரும் பகலவனோ

பார்த்தவாறே விலகிச் செல்ல

 

மாலை வரும் சந்திரனோ

எதிர்நின்று கண்டு செல்ல..

கூட வரும் மீன்களெல்லாம்

கண் சிமிட்டி ஆர்ப்பரிக்க

 

உடலெங்கும் போர்வையாய்

போர்த்தி நிற்கும்

பனித் துளிகளைத்

துணை நிற்கக் கேட்டேன்....

 

இடம் கொடுத்துத்

தாங்கி நின்ற

எனை விட்டு

ஓடுதம்மா உருகி...

 

போகும் வழிப்

போகையிலே ரணப்

படுத்திச் செல்வதனை

சலிப்போடு கண்டாலும்

 

உயரே... தனியே..

நிமிர்ந்தல்லவோ

நிற்கின்றேன்...

மானிடா.... பாடம் படி....!




2 கருத்துகள்:

jas சொன்னது…

Thamizh...arumai....i think am seeing a positive note in this kavidhai...keep going thamizh.....

தாரணி பிரியா சொன்னது…

இதே போல நிறைய தன்னம்பிக்கை கவிதைதான் எங்களுக்கு வேணும் தமிழ்.