.
வற்றிப்போய்க் கிடந்த நதி
ஒரு பெரும் மழையில்
அணை உடைத்ததோ..!
அணை உடைத்த வெள்ளம்
காட்டாறாய் மாறி-கரை
தாண்டி வனம் சூழ்ந்ததோ..!
வனம் சூழ்ந்த காட்டாறு
அருகி நின்ற மரங்களை
வேரோடு பெயர்த்ததோ..!
வேரோடு பெயர்ந்த மரம்
காட்டாறும் போன வழி
மீளாது நதியின் வழி..!
மீண்டும் இயல்பு மாறி
கட்டுண்டு போன நதியின்
ஓரங்களில் பூத்தல் தவறோ..!
துளிர் விட்டு மெல்ல
கரை மேலே பூத்து
செழிப்பினைக் கூறல் தவறோ..!
பெரு மழையின் தவறோ
அணையின் பலமோ
கரையின் குறையோ..!
மீண்டும் பூக்கும்
மரங்கள் இருக்க
நதியின் ஓரம் மிளிரும்!
.
4 கருத்துகள்:
\\பெரு மழையின் தவறோ
அணையின் பலமோ
கரையின் குறையோ..!
மீண்டும் பூக்கும்
மரங்கள் இருக்க
நதியின் ஓரம் மிளிரும்!\\
மிகவும் இரசித்தேன் ...
நன்றி ஜமால் அண்ணா.. :)
அற்புதம் சகோதரா, உங்கள் கவிதையை படித்த பிறகு,
சிலவற்றில் தோல்வியடைந்த மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.
"மீண்டும் பூக்கும்
மரங்கள் இருக்க
நதியின் ஓரம் மிளிரும்!"
அருமையான வரிகள்.
கருத்துரையிடுக