நெஞ்சம் சுருக்கென்றது
எல்லாம் கனவென்றது
கனவில் நடந்ததெல்லாம்
வாழ்வில் நடந்திருந்தால்...
நானும் கவிஞனல்ல
நீயும் ரசிகரல்ல...
கனவு தெளிந்தபின்னே
பகிரத் தாவிவந்தேன்
வார்த்தை தட்டவில்லை
மனது ஒப்பவில்லை
ஆசைகள் பெரிதாக...
மனதோ சிறிதாக
கனவிலேனும் வாழ்ந்துவிட
ஆசை கொண்டேன்
மனதின் உள்ளே
துடிப்பு அதிகரிக்க..
தூக்கம் இனியேது
கண்விழிப்பு வந்தபின்னே...