வெள்ளி, 3 அக்டோபர், 2008

தூரத்துப் பச்சை!!!

தூரத்துப் பச்சை அழகு
பட்டமரம் துளிர்த்தால்ழகு!
விண்மீன்கள் இரவில் அழகு
வான்வெளியில் பூமியழகு!


உயரத்தில் பள்ளம் அழகு
பள்ளத்தில் உயரமழகு!
ஒரு கரையில் மறுபுறமழகு
காட்டினுள்ளே இடைவெளி அழகு!


ஆணுக்குப் பெண் அழகு
பெண்ணுக்கு ஆணழகு!
மனதிற்கு அன்பு அழகு
அன்பென்றால் கொடுத்தலழகு!


கூட்டினுள்ளே நெருக்கம் அழகு
கருவறைக்குள் துடிப்பழகு!
நெகிழ்வான தருணங்கள்
பிறர் வாழ்வில் நிகழ்ந்தாலழகு!


இதயத்தில் அன்பிருப்பின்
வெளிப் படுத்தும் கோபமழகு!
எல்லையற்ற உரிமை கொண்டால்
தண்டித்தல் கூட அழகு!


உனக்காக அன்பர் படும்
துயரங்கள் மதித்தால் அழகு!
உள்ளத்தால் பழகுபவர்
உணர்வுகளை உணர்ந்தால் அழகு!


தூரத்துப் பச்சை அழகு
பட்டமரம் துளிர்த்தாலழகு!
விண்மீன்கள் இரவில் அழகு
வான்வெளியில் பூமியழகு!!!


3 கருத்துகள்:

தாரணி பிரியா சொன்னது…

அழகு அழகு கவிதை அழகு
தமிழின் கவிதைகள் எல்லாமும் எப்போதும் அழகு

தாரணி பிரியா சொன்னது…

இந்த புது டெம்ப்ளேட் நல்லாயிருக்கு தமிழ். (எனக்கு பச்சை ரொம்பவே பிடிச்ச நிறம்)

தமிழ்தினா சொன்னது…

தாரணிப் ப்ரியா சொன்னது:

\\அழகு அழகு கவிதை அழகு
தமிழின் கவிதைகள் எல்லாமும் எப்போதும் அழகு\\

நன்றிகள் சகோதரி! தொடர்ந்து அளிக்கும் ஊக்கத்தினால் மகிழ்ச்சி :)

எனக்கும் பச்சை பிடித்த ஒரு நிறமே.. :)