சனி, 14 பிப்ரவரி, 2009

உதிர்ந்த சருகானால்....

.உன் கிளையின் பூவானால்
மணம் வீசிப் பலரிழுப்பேன்
உன் பூவின் பழமானால்
உன் பெயரைச் சொல்லிடுவேன்
முறிந்த கிளையானால்
உன் பாரம் குறைத்திடுவேன்
உதிர்ந்த சருகானால்
உன்னடியில் உரமாவேன்...
உன்னடியில் வேரானால்
புயலினிலும் காத்திடுவேன்
எதுவாயினும் சம்மதமே..
உயிர்கலப்பு இதுவன்றோ.....

5 கருத்துகள்:

தாரணி பிரியா சொன்னது…

:)

தமிழ்தினா சொன்னது…

அடேங்கப்பா... :)

shree சொன்னது…

தமிழ், உங்களை பற்றி ஹம்தும்மில் "நல்ல சிந்தனையாளன்" ,"நல்ல கவிஞன்" என்றெல்லாம் சொல்வார்கள். எனக்கு அப்பொழுது தெரியவில்லை. (MM2 பற்றி மட்டும் படிப்பேன்).இப்பொழுது உங்கள் ஒவ்வொரு கவிதையும் புரியவைக்கிறது.

shree சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் அருமை.

தமிழ்தினா சொன்னது…

நன்றிகள் சகோதரி ஸ்ரீ... உங்கள் வெளிப்படையான பாராட்டு எனை மேலும் எழுதத் தூண்டுகிறது...

தொடர்ந்திருங்கள்.