மனிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜூலை, 2012

புதையல்..!

சாவு கிராக்கி
கஸ்மாலம்
வீட்டிலே சொல்லிட்டு
வந்திட்டியா..

நடுரோட்டில்
உனக்கென்ன புதையலா
கிடைத்தது..!?
எந்த பூதம்
காட்டிக் கொடுத்தது..!?

அமைதியாய்..
சிந்திய புன்னகை
அருகிருந்தவரைக் கோபமூட்டியது..
மாற்றங்கள் ஒன்றும்
தெரியா உருவம் தான்..

என்னறையின்
ஒரு மூலையில்
பத்திரமாய்
ஒளிந்திருக்கும் மூன்றாம்
காலுக்குத் தெரியும்
புதையல் எங்கு
இருக்கின்றதென்று...!

நிழலின் பயணம்..!

ஒரு நீண்ட பயணத்தின்
இடையே..
இரவு நேர
உணவிற்காக
நிறுத்தப் பட்டது
வாகனம்..!

அவசரமாய் ஒதுங்க
இடம் தேடிப்
பார்த்த போது
தூரத்தே தெரிந்த
கட்டண விடுதலை
கண்களில் பட்டதும்
அதை நோக்கித்
துவங்கியது..
நிழலின் பயணம்...!

ஆங்காங்கே மனிதர்கள்
அருகிருந்த இடங்கள்
தள்ளிச் சென்று
விடுதலை கொடுத்தேன்..!
தடுப்பினைப் பிடித்து
தாங்கி நிற்க
மனம் இல்லாததால்
நில்லாது துவங்கியது
அரை நொடியில்
நடனம்..!

எதிர் புறத்தில்
தானும் விடுதலைக்காய்
நின்றவர்க்கு வேகமாய்
ஆடிய நிழல்
ஆர்வம் கிளறிவிட்டிருக்க
ஆவலைத் தணித்துக் கொண்டு
மீண்டும் நடந்த போது
அவருக்கு விளங்கியிருக்க
வேண்டும்..‍ - என்
நிஜத்தின் வேறுபாடு..!

சனி, 27 செப்டம்பர், 2008

நல் இதயங்கள் வாழ்க!

இதயத்தால் வாழ்கிறாய்!
கண்களால் பார்க்கிறாய்!
இன்னும் என்னென்ன
உறுப்புகளால் செய்வதை
செவ்வனே செய்கிறாய்!
இதிலென்ன இருக்கிறது!?
அனைவரும் செய்வதுதானே!
நாங்கள் வாழும்போது செய்வதை
இறந்தபின்னும் செய்யும்
மாமனிதா!!! ஹிதேந்திரா!!!
உனக்கல்ல உன்
பெற்றோருக்கு ஆயிரம்
கோடி வணக்கங்கள்!
பெருகட்டும் ஹிதேந்திரர்கள்!
வளரட்டும் உற்றோர் மனம்!!!