வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

கடைசிப் பக்கம்...

.

ஒவ்வொரு பக்கமும்
பரபரப்பாய்..
ஒவ்வொரு வரியிலும்
திருப்பங்களாய்..
எத்தனைத் துன்பங்கள்
எத்தனை ஆச்சர்யங்கள்
எத்தனை இழப்புகள்
படிக்கையில் அடுத்தென்ன
எனும் தூண்டுதலாய்..


இதோ இன்றைய
பக்கத்தில் வந்து
நகர மறுக்கிறது..
நான் விரும்பியோ
விரும்பாமலோ
படிக்க நேர்ந்துவிட்ட
புத்தகமே..-உன்
இறுதிப் பக்கம்
இப்போதே கண்டு விட
பெரும் ஆசை..


முடிவு தெரியாமல்
அல்லாடிக் கொண்டிருக்க
எப்படித்தான் இருக்கப்
போகிறதோ என
சிந்தையைத் தூண்டிவிட
அதற்கொரு வழி
சொல் - வாழ்க்கையெனும்
புதிரான புத்தகமே....

.

5 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\வாழ்க்கையெனும்
புதிரான புத்தகமே...\\

அருமை தினா.

shree சொன்னது…

"எத்தனைத் துன்பங்கள்
எத்தனை ஆச்சர்யங்கள்
எத்தனை இழப்புகள்"

அருமை தினா, யாராலும் மீட்டுத் தறமுடியாத பக்கங்கள் ஹும்...

shree சொன்னது…

"இறுதிப் பக்கம்
இப்போதே கண்டு விட
பெரும் ஆசை.."

:( :( :( :( ஏன் இப்படி?

"வாழ்க்கையெனும்
புதிரான புத்தகமே..."

அற்புதம் தினா.வாழ்க்கை புதிராகவும் டென்ஷன் ஆகவும் தான் இருக்கிறது.

தமிழ்தினா சொன்னது…

நன்றி ஜமால் அண்ணா.

தமிழ்தினா சொன்னது…

shree said : \\ "இறுதிப் பக்கம்
இப்போதே கண்டு விட
பெரும் ஆசை.."

:( :( :( :( ஏன் இப்படி?

"வாழ்க்கையெனும்
புதிரான புத்தகமே..."

அற்புதம் தினா.வாழ்க்கை புதிராகவும் டென்ஷன் ஆகவும் தான் இருக்கிறது.\\


ம்.. சகோதரி, சில மிகப் புதிரான நாவல்களில், இறுதியாய் எப்படித்தான் முடித்திருப்பார்கள் என எதிர்பார்ப்போடு இறுதிப் பக்கம் தேடி நம் கைகள் நகர்வதில்லையா..!?

சுவாரஸ்யம் குறைந்து போகும் எனத் தெரியும் தான். ஆனாலும், வெகு சில நேரங்களில்.. அய்யோ முடிவு தெரியவில்லையானால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்ற எண்ணம் நமக்குள் தலை விரித்தாடுமில்லையா..!?

அதைப் போலத்தான், வாழ்வின் கடைசிப் பக்கத்தில் நாம் என்ன செய்வோம் என அறிய விழையும் ஒரு ஆன்மா பற்றிய கவி...

நன்றிகள் கருத்துகளுக்கு. :)