சனி, 27 டிசம்பர், 2008

வீணில் கரையுதடி...

 

தழுவிய கைகளும்

தடவிய இதழ்களும்

பருகிய விழிகளும்

இழந்தன உன்னை!

 

சுமந்த நெஞ்சம்

மட்டும் - தோழி!

சுமையை இறக்கவில்லை

இழக்க விழையவில்லை

 

தொடர்ந்து சுமக்குதடி

ஊனை உருக்குதடி

வீணில் கரையுதடி

நினைவை இழுக்குதடி..

 

உதிரம் கொதிக்குதடி

வாழ்க்கை கசக்குதடி

நெஞ்சுக்கு நீதி

செய்தால்...- கடிதான

வாழ்வும் இனிக்குமடி...

 

என்னெஞ்சே நீ யோசி..!

11 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

வீணில் கரையலாமா

நட்புடன் ஜமால் சொன்னது…

\\தழுவிய கைகளும்

தடவிய இதழ்களும்

பருகிய விழிகளும்

இழந்தன உன்னை!\\

சங்ககாலங்களில் ‘பசலை’ ன்னு சொல்லுவாங்களே - அதுவா ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\சுமந்த நெஞ்சம்

மட்டும் - தோழி!

சுமையை இறக்கவில்லை

இழக்க விழையவில்லை\\

உன்னை சுமந்த நினைவுகளை
நான் இன்னும் இழக்கவில்லை
ஏனெனில்
நான் இன்னும் இறக்கவில்லை

நட்புடன் ஜமால் சொன்னது…

\\உதிரம் கொதிக்குதடி

வாழ்க்கை கசக்குதடி

நெஞ்சுக்கு நீதி

செய்தால்...- கடிதான

வாழ்வும் இனிக்குமடி...\\

நிச்சியம் இனிக்கும் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\என்னெஞ்சே நீ யோசி..!\\

எப்படியாயினும் என்னை நேசி ...!

தமிழ்தினா சொன்னது…

வரிக்கு வரி கருத்துகள் தெரிவித்தமைக்கு நன்றிகள் ஜமால் அண்ணா..

ஹ்ம்.. பசலை தான்.. இது ஒரு ஆணுக்கு வந்த பசலை.. சங்க காலப் பாடல்களில் பெண்களின் பசலை பற்றி மட்டுமல்லவா பாடப்பட்டிருக்கிறது!?

தமிழ்தினா சொன்னது…

\\ உன்னை சுமந்த நினைவுகளை
நான் இன்னும் இழக்கவில்லை
ஏனெனில்
நான் இன்னும் இறக்கவில்லை \\

நன்று ஜமால் அண்ணா..

நட்புடன் ஜமால் சொன்னது…

\\
ஹ்ம்.. பசலை தான்.. இது ஒரு ஆணுக்கு வந்த பசலை.. சங்க காலப் பாடல்களில் பெண்களின் பசலை பற்றி மட்டுமல்லவா பாடப்பட்டிருக்கிறது!?\\

உண்மைதான்.

ஆண்களுக்கு அந்த நிலை ஏற்படவேயில்லையோ அந்த காலங்களில்

Unknown சொன்னது…

Answer for your repeated Question about my attitude is your kirukkal.

You are a very good mind reader man.

Hats off to you

தமிழ்தினா சொன்னது…

சூழ்நிலையினால் பிரிந்தவர்கள் வேறு. தன் எண்ணங்களினால் பரிந்தவர்கள் வேறு நண்பா...

புரிந்து கொள்ள வேண்டியது நீதான் அருள்...

கவிதையை எழுதியவன் எழுதிய அர்த்தம் வேறாயிருக்க, நாம் நமக்கு ஏற்றவாறு எடுத்துக் கொண்டால் எப்படி!?

பெயரில்லா சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.