செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

அடுத்தேனும் கிட்டட்டும்...

.



கூடல் கொள்ளவில்லை
கூடிக் களித்திருந்தோம்
ஊடல் கொண்டதில்லை
உயிரைக் கொண்டிருந்தோம்

என்னை மறுத்த பின்னே
வாழ்வு சுகமானதோ..!?
விடை சொல் என் தோழா
கொடுத்தல் பெரிதென்றீர்...

கொடுத்துப் பார்த்தபோது
வலித்தது எனக்குள்ளே...
உமக்கு வலிக்கவில்லையோ
உயிரும் துடிக்கவில்லையோ..

உயிரின் தவிப்பெல்லாம்
ஒன்றாய் இழுத்தெடுத்து
பெரிதாய் மூச்சிழுத்து
பலமுறை மரணித்தேன்..

யாருக்காய் கொடுத்தீரோ
அவர்தாம் மதித்தாரோ..
வாழும் முறைமையிலே
வாழ வழி விட்டாரோ..!?

மறுமுறை வாய்த்தபோதும்
தவிர்க்கச் செய்தாரே...
அடுத்தொரு பிறப்புக்காய்
காத்திருக்க வைத்தாரே..

பதில் சொல் என் தோழா..
கொடுத்தல் சுகமானதா..
இல்லையது என்கின்றேன்
இன்னுமென்ன சொல்கின்றீர்...


அடுத்தொரு பிறப்புக்காய்
காத்திருக்கும் என் தோழி
உன்னை இழந்த பின்னும்
இழப்புகள் தொடர்ந்ததுண்டு...

இருவரும் அன்பு கொண்டோம்
ஒருவரால் பிரிந்து நின்றோம்..
இருமுறை வாய்த்தபோதும்
ஆளுக்கொருமுறை பகிர்ந்தோம்....

கொடுத்து அறியாதோர்
துரோகம் என்று சொல்வார்
விலகிச் செல்கையிலே
உயிர்த் துடிப்பை யாரறிவார்!?

உனக்கும் அறிந்து கொள்ள
இறைவன் வாய்ப்பளித்தான்...
இதற்குமேல் என் சொல்ல..
உணர்ந்திடுவாய் என் தோழி...

உன்னை இழந்த பின்னே
அன்புக்கு வழியேயில்லை
என்றிருந்த எனக்குள்ளும்
அன்பு முகிழ்ந்ததுவே...

உனையல்லால் யாரிடத்தும்
காதல் அல்ல..
அன்பு மட்டிலுமே
அதிலும் தோல்வியன்றோ...


கேட்டு வரவில்லை..
எல்லாம் இழ்ந்தபின்னே
துரும்பாய் சிக்கியது..
இரும்பாய் தோன்றியது...

தொடரிழப்பின் தவிப்பினிலே
அழுந்தப் பற்றியதால்
துரும்பும் உடைந்ததுவோ
துயரும் தொடர்ந்ததுவோ..

அன்னை முதல்
அனைவரின் கண்கள்
முன்னே விரியும்
நொடிநேர வேதனைகள்...

எடுத்துரைத்த போது
உடனுணர்ந்து கொண்டு
இனியில்லை இவ்வழமை
இரும்பூது எய்துங்கள்

நொடிநேர சஞ்சலங்கள்
யார்க்கும் இனியில்லை
சொல்லிய அன்பல்லவோ
அளித்தது எனக்குள்ளே...

இருட்டில் தொலைத்ததினால்
இருட்டில் துழவி நின்றேன்
இருட்டே இல்லையென்றார்
அதிர்ந்து நின்று போனேன்...

இருட்டு இல்லை என்றால்
தொலைந்தது பொய்யாகுமோ..
வெளிச்சம் போட்டுவிட்டால்
அனைத்தும் கற்பனையாகிடுமோ..


விட்டுக் கொடுத்தலொன்றே
வழி என்றார் என்னிடமே..
கொடுத்தல் புதிதல்லவே..
கொடுத்தேன் அதனாலே...

பிஞ்சில் தொடங்கியது
இன்னும் தொடர்கிறது
இழப்பு என்ற ஒன்றே
நிரந்தரம் ஆன ஒன்றோ..!?

அடுத்தொரு பிறப்புக்காய்
நானும் காத்திருக்கிறேன்
இம்முறை இழந்ததெல்லாம்
அடுத்தேனும் கிட்டட்டும்...!!!


22 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

அருமை

நட்புடன் ஜமால் சொன்னது…

\\கூடல் கொள்ளவில்லை
கூடிக் களித்திருந்தோம்
ஊடல் கொண்டதில்லை
உயிரைக் கொண்டிருந்தோம்\\

ஆரம்பமே அசத்தல் நண்பரே

நட்புடன் ஜமால் சொன்னது…

\\என்னை மறுத்த பின்னே
வாழ்வு சுகமானதோ..!?
விடை சொல் என் தோழா
கொடுத்தல் பெரிதென்றீர்...\\

உண்மையே

கொடுத்தலே சுகம் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\உயிரின் தவிப்பெல்லாம்
ஒன்றாய் இழுத்தெடுத்து
பெரிதாய் மூச்சிழுத்து
பலமுறை மரணித்தேன்..\\

அருமை.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\யாருக்காய் கொடுத்தீரோ
அவர்தாம் மதித்தாரோ..
வாழும் முறைமையிலே
வாழ வழி விட்டாரோ..!?\\

(கொடுக்கும் போது யோசிக்கனும்)

யாராலும் முடியாதது.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\பதில் சொல் என் தோழா..
கொடுத்தல் சுகமானதா..
இல்லையது என்கின்றேன்
இன்னுமென்ன சொல்கின்றீர்...\\

கொடுத்தல் சுகமே தோழா

நட்புடன் ஜமால் சொன்னது…

\\உனக்கும் அறிந்து கொள்ள
இறைவன் வாய்ப்பளித்தான்...
இதற்குமேல் என் சொல்ல..
உணர்ந்திடுவாய் என் தோழி...\\

ஆரோக்கியம்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\நொடிநேர சஞ்சலங்கள்
யார்க்கும் இனியில்லை
சொல்லிய அன்பல்லவோ
அளித்தது எனக்குள்ளே...\\

மிகவும் அழகு

மிகவும் கடினம்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\விட்டுக் கொடுத்தலொன்றே
வழி என்றார் என்னிடமே..
கொடுத்தல் புதிதல்லவே..
கொடுத்தேன் அதனாலே...\\

விட்டு கொடுத்தல்

வேறு ஒருவருக்கு நிச்சியம் நலவாய் அமையும்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\பிஞ்சில் தொடங்கியது
இன்னும் தொடர்கிறது
இழப்பு என்ற ஒன்றே
நிரந்தரம் ஆன ஒன்றோ..!?\\

இழப்பு தான் நிறந்தரம்

இழப்பு என்று கருதும் வரை ...

தமிழ்தினா சொன்னது…

நன்றிகள் நண்பர் திகழ்மிளிர் அவர்களே...

தமிழ்தினா சொன்னது…

\\ விட்டு கொடுத்தல்

வேறு ஒருவருக்கு நிச்சியம் நலவாய் அமையும். \\

ம்... அண்ணா.. பிரிவினைப் பார்த்தீர்களா..!?

காதலும் நட்பும்.... முந்தையது காதலென்றால்...

:(

தமிழ்தினா சொன்னது…

\\ மிகவும் அழகு

மிகவும் கடினம்

\\

உண்மை..


மிகக் கடினம்... :(

தமிழ்தினா சொன்னது…

\\ இழப்பு தான் நிரந்தரம்

இழப்பு என்று கருதும் வரை ...

\\

ம்... இழப்பு என்றுணரும் முன்னர் அடுத்தொரு இழப்பு வரும் நிலையை என்னவென்று சொல்ல இயலும்..!?

தமிழ்தினா சொன்னது…

ஜமால் அண்ணா, நிச்சயம், நிரந்தரம் என்பவையே சரி...


நன்றிகள் அண்ணா...

பெயரில்லா சொன்னது…

அற்புதம் தமிழ் .
உங்கள் கவிதைகளில் நான் படித்ததில் இதுதான் மிக பெரிய கவிதை என்று நினைக்கிறேன். அதிலும் பல இடங்களில் எதுகை மோனையுடன் அற்புதமான கவிதை தந்துருக்கீங்க. வா..........ழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

"அடுத்தொரு பிறப்புக்காய்
நானும் காத்திருக்கிறேன்
இம்முறை இழந்ததெல்லாம்
அடுத்தேனும் கிட்டட்டும்...!!!"

ஏன் இந்த விரக்தி நண்பா? இப்பிறவியிலேயே எல்லாம் கிட்டும், கிடைத்திட வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

"இழப்பு என்ற ஒன்றே நிரந்தரம் ஆன ஒன்றோ..!?"

ஏன் இப்படி?!!! வாழ்க்கை சக்கரம் சுழலும் பொது இன்பம், துன்பம் மாறி மாறி வரும் என்பது நீங்கள் அறியாதது அல்லவே? அப்படி இருக்கும்போது துன்பம் ஒன்றே எப்படி நிலை ஆகும்?, மன்னிக்கவும்.

தமிழ்தினா சொன்னது…

shree சொன்னது : \\ அற்புதம் தமிழ் .
உங்கள் கவிதைகளில் நான் படித்ததில் இதுதான் மிக பெரிய கவிதை என்று நினைக்கிறேன். அதிலும் பல இடங்களில் எதுகை மோனையுடன் அற்புதமான கவிதை தந்துருக்கீங்க. வா..........ழ்த்துக்கள். \\

நான் எழுதியவற்றில் இதுதான் பெரிதா எனத் தெரியவில்லை.. நீங்கள் படித்தவற்றில் இதுதான் பெரிதென நினைக்கிறேன்..

பாராட்டுகளுக்கு நன்றிகள் சகோதரி..

தமிழ்தினா சொன்னது…

shree சொன்னது : \\ ஏன் இந்த விரக்தி நண்பா? இப்பிறவியிலேயே எல்லாம் கிட்டும், கிடைத்திட வாழ்த்துக்கள். \\


ம்..... அது விரக்தி அல்ல சகோதரி... தொடரிழப்புகளின் வலி..

ஒரு காதலனும், காதலியும் இருமுறை சேர்ந்திடும் வாய்ப்பிழந்தபின்னே பேசிக் கொள்ளும் விதம் வேறாய் இராதல்லவா...!?

அந்த கற்பனை தான்... வேறு ஒன்றுமல்ல...

வலிகளைக் கொணர்பவன் கவிஞன் என்று சொல்வார்கள்..

மகிழ்வையும் எழுதவே ஆசை... ஆனால், மனதுக்குக் கடிவாளம் இட்டுக் கொள்வதில்லை...

மகிழ்வும் எழுத வரும்... நிச்சயம் விரைவில் எழுதுகிறேன்... :)

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

பெயரில்லா சொன்னது…

என்னை மறுத்த பின்னே
வாழ்வு சுகமானதோ..!?
விடை சொல் என் தோழா
கொடுத்தல் பெரிதென்றீர்...

manathai thota varigal....

Simply superb Tamizh....

Vazhthukkal....