வெள்ளி, 26 டிசம்பர், 2008

கண்ணோரச் சுருக்கங்கள்...


மகிழ்வான தருணங்களில்

உண்டாகும் புன்னகையில்

வந்து விழும்

கண்ணோர சுருக்கங்கள்..

 

விழிகள் விரித்துக்

விழிகள் நோக்கி

தொட்டு நீ கைதடவ..

தொட்ட விரலத்தனையும்

இழுத்து இதழ் உரசிவிட...


மீசையின் குறுகுறுப்பில்

சிணுங்கியப் பைங்கிளி

கைகளினை உதர..

நாணம் கண்டு

நான் மகிழ...

 

நாட்கள் தொலைந்தன

மாதங்கள் ஆகின..

வருடங்களும் ஓடின..

ஆயினும்..

 

இதழ்களிலே உணர்ச்சிகளின்

இதமான ஈரம்

பதமாக இருக்கிறது

நாவினை இழுக்கிறது..

 

உன் கன்னக்

கதுப்புகளில் சிகப்பு

இன்னமும் இருக்கிறதோ..

இருந்தால் கொடு தோழி!

இங்கே சிலரின் இதழ்களுக்குத்

தேவையாம் சாயம்..!



11 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

கண்ணோரச் சுருக்கங்கள்

பல அர்த்தங்கள் சொல்லும்...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\விழிகள் விரித்துக்

விழிகள் நோக்கி

தொட்டு நீ கைதடவ..

தொட்ட விரலத்தனையும்

இழுத்து இதழ் உரசிவிட...\\

ஆஹா ஆஹா - நல்ல காலைப்பொழுது

ரொமாண்டிக் ... டிக் ... டிக் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\உன் கன்னக்

கதுப்புகளில் சிகப்பு

இன்னமும் இருக்கிறதோ..

இருந்தால் கொடு தோழி!

இங்கே சிலரின் இதழ்களுக்குத்

தேவையாம் சாயம்..!\\

அருமை அருமை ...

தமிழ்தினா சொன்னது…

\\கண்ணோரச் சுருக்கங்கள்
பல அர்த்தங்கள் சொல்லும் \\

உண்மை ஜமால் அண்ணா..


\\ ஆஹா ஆஹா - நல்ல காலைப்பொழுது

ரொமாண்டிக்...டிக்...டிக்...\\


ஹ்ம்... அனுபவம்.... :)

நன்றிகள் கருத்துகளுக்கு...

பெயரில்லா சொன்னது…

தமிழ் எப்பவும் போல் அருமையாக கவிதை எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு கவிதையும் உங்கள் புலமையை எங்களுக்கு புரிய வைக்கிறது.வாழ்த்துக்கள்

தமிழ்தினா சொன்னது…

நன்றி ஸ்ரீ... தொடர்ந்து எழுத முயற்சிப்பேன்..

தாரணி பிரியா சொன்னது…

:) :) :) அட ரொமாண்டிக் கவிதை நல்லாயிருக்கே இன்னும் நிறைய இருக்குமுன்னு தெரியும். எப்ப அது எல்லாம் ரிலீஸ்?

தமிழ்தினா சொன்னது…

\\ :) :) :) அட ரொமாண்டிக் கவிதை நல்லாயிருக்கே இன்னும் நிறைய இருக்குமுன்னு தெரியும். எப்ப அது எல்லாம் ரிலீஸ்? \\

:) மெல்ல..மெல்ல... ஒவ்வொன்றாய்...

பெயரில்லா சொன்னது…

I don't have tamil font in my laptop
your poems are good...
I want to say something but
I don't know if I can say or not..
so may be I will try to critizise
you next time..

தமிழ்தினா சொன்னது…

மரியா, உலகில் மாற்றுக் கருத்துகள் கொண்டோர் எப்போதும் உளர். நீங்கள் தவறாமல் உங்கள் கருத்தினை இங்கே வெளியிடலாம். மாற்றுக் கருத்துகளே மனிதர்களை எதிரிகளாக்கி விடுவதுமில்லை. உங்கள் சிறு தயக்கம் தேவையற்றது.

மேலும் எல்லாக் கவிதைகளும் சிறப்பானதாகத் தான் இருக்க வேண்டுமென்பதுமில்லை. இது ஒரு தனி மனிதனின் கருத்தாக எண்ணிப் பாருங்கள்.

கவிதைகள் நன்று எனச் சொன்னதற்காக என் வந்தனங்கள். உங்கள் கருத்துக்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன், எவ்வடிவினதாயினும்... :)

ஆதவா சொன்னது…

கண்ணோர சுருக்கங்கள் என்பதே வித்தியாசமான காதல் சிந்தனை..

ஏனைய கவிதை வரிகள், இவ்வகையிலேயே தனித்து சிறப்பாக இருக்கின்றன.

தொடருங்கள்.