வியாழன், 29 ஜனவரி, 2009

கண்விழிப்பு வந்தபின்னே…!

 

 

நெஞ்சம் சுருக்கென்றது
எல்லாம் கனவென்றது
கனவில் நடந்ததெல்லாம்
வாழ்வில் நடந்திருந்தால்...
நானும் கவிஞனல்ல
நீயும் ரசிகரல்ல...
கனவு தெளிந்தபின்னே
பகிரத் தாவிவந்தேன்
வார்த்தை தட்டவில்லை
மனது ஒப்பவில்லை
ஆசைகள் பெரிதாக...
மனதோ சிறிதாக
கனவிலேனும் வாழ்ந்துவிட
ஆசை கொண்டேன்
மனதின் உள்ளே
துடிப்பு அதிகரிக்க..
தூக்கம் இனியேது
கண்விழிப்பு வந்தபின்னே...

முத்தமிழ் மன்றத்தில்......

13 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\நானும் கவிஞனல்ல
நீயும் ரசிகரல்ல...\\

உண்மை.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\ஆசைகள் பெரிதாக...
மனதோ சிறிதாக\\

வரிகள் சிறியதாக
விஷயம் பெரியதாக

நட்புடன் ஜமால் சொன்னது…

\\தூக்கம் இனியேது
கண்விழிப்பு வந்தபின்னே...\\

சரியாக(ச்) சொன்னீர்கள் தோழா.

shree சொன்னது…

"கனவிலேனும் வாழ்ந்துவிட
ஆசை கொண்டேன் "
சரியாகச் சொன்னீர்கள் பல சமயம் கற்பனை தான் மகிழ்ச்சி தருகிறது.

shree சொன்னது…

"தூக்கம் இனியேது
கண்விழிப்பு வந்தபின்னே..."
OMG தூக்கம் இல்லை என்றால் கனவுகள் ஏது?ம்ம்ம்... பகல் கனவு காணவேண்டியதுதான்.

shree சொன்னது…

சகோதரா,
அருமையான தலைப்புடன் சுவை(மை)யான வரி(லி)களுடன் அற்புதமான கவிதைகள் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

தமிழ்தினா சொன்னது…

உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு நன்றிகள் ஜமால் அண்ணா.

தமிழ்தினா சொன்னது…

\\ OMG தூக்கம் இல்லை என்றால் கனவுகள் ஏது?ம்ம்ம்... பகல் கனவு காணவேண்டியதுதான். \\

சகோதரி, அதன் அர்த்தம் அதுவல்ல... :)

தமிழ்தினா சொன்னது…

\\ சகோதரா,
அருமையான தலைப்புடன் சுவை(மை)யான வரி(லி)களுடன் அற்புதமான கவிதைகள் தருகிறீர்கள். வாழ்த்துக்கள். \\

ம். நன்றிகள் சகோதரி.

thevanmayam சொன்னது…

கனவிலேனும் வாழ்ந்துவிட
ஆசை கொண்டேன்
மனதின் உள்ளே
துடிப்பு அதிகரிக்க..
தூக்கம் இனியேது
கண்விழிப்பு வந்தபின்னே.//

அருமையான கவிதை...

தமிழ்தினா சொன்னது…

வருகைக்கும், தருகைக்கும் நன்றிகள் தேவன் மாயம்.

thevanmayam சொன்னது…

நிறைய எழுதுங்கள் தினா!!!
காலை வணக்கம்...

தமிழ்தினா சொன்னது…

காலை வணக்கம்..

நிச்சயம் செய்கிறேன் நண்பரே..